சென்னை மேயர் சைதை துரைசாமி வீட்டில் வருமானவரி சோதனை!

சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரது வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் 40 இடங்களில் இன்று வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சென்னை, மதுரை, கோவை, நெல்லை,  திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள 40 இடங்களில் பல்வேறு நிறுவனங்கள், நகைக் கடைகள், வீடுகள், அலுவலகங்கள் என ஏராளமான இடங்களில் வரிமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதில் சென்னையின் பிரபல வைர வியாபாரியான கிரித்திலாலுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுகிறது. அதேபோல முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமான இடங்களிலும், மேயர் சைதை துரைசாமி வீட்டிலும் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மேயர் சைதை துரைசாமி வீட்டு பகுதியில் பத்திரிகையாளர்கள் கூடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.