சென்னையில் வருமான வரிசோதனை 90 கோடி ரூபாய், 100 கிலோ தங்கம் பறிமுதல்?

கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்ததையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொண்டனர். இவ்வாறு ரூபாய் நோட்டு மாற்றிக்கொடுக்கப்பட்டதில் பல இடங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் புகார்கள் வருகின்றன இதை தொடர்ந்து வருமான வரி துறையினர் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து சென்னையில் இன்று தி.நகர் உள்பட 8 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேனாம் பேட்டை, அண்ணா நகர், தி.நகர் உள்பட 8 இடங்களில் இந்த் சோதனை நடைபெற்றது.சீனிவாச ரெட்டி, சேகர் ரெட்டி, பிரேம் ஆகிய தொழில் அதிபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் மொத்தம் ரூ 90 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  இதில் ரூ.70 கோடி ரூபாய் புதியதாக வெளியிடப்பட்ட ரூ. 500, 2 ஆயிரம் நோட்டுகளாகும். மேலும் 100 கிலோ தங்கமும் பிடிபட்டது.