நடிகை அமலா பால் நடிக்கும் அடுத்த படம் கள்ளக் காதல் கதையாக உருவாகிறது?

இந்த இரண்டாம் பாகத்தில் அமலா பால் நாயகியாக நடிக்கிறார். நாயகனாக பாபி சிம்ஹாவும், வில்லனாக பிரசன்னாவும் நடிக்கின்றனர்.

முந்தைய பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் கள்ளக் காதலை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். கல்பாத்தி எஸ்.அகோரம் இந்தப் படத்தை தயாரிக்கிறார். சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகும் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் நாயகியாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

2006ம் ஆண்டு ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுசி கணேஷ் இயக்கத்தில் வெளியான படம் ‘திருட்டு பயலே’. ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா, அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது அப்படத்தின் 2ம் பாகம் அதே நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அக்கதையின் தொடர்ச்சியாக இல்லாமல், தற்போதுள்ள சூழலுக்கு ஏற்றுவாறு வேறு ஒரு கதையை தயார் செய்திருக்கிறார் சுசிகணேசன்.

நாயகனாக பாபி சிம்ஹாவும், வில்லனாக பிரசன்னாவும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். நாயகியாக மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது.

இப்படத்தின் நாயகியாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். முதல் பாகத்தைப் போலவே இந்த பாகத்தின் படப்பிடிப்பும் வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார் சுசி கணேசன். இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Share This Post