நெடுஞ்சாலையில் சீறிப் பாய்ந்த இந்திய போர் விமானம்!

வரலாற்று சிறப்புமிக்க 302 கிமீ நீள ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது. 23 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் சாலையில், அவசர காலத்தில் போர் விமானங்கள் தரையிறங்குவதற்கு ஏதுவாக  3.3 கி.மீ நீள ஓடுப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாநில முன்னாள் முதல்-மந்திரியும், இப்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான மாயாவதி, ”பணிகள் நடைபெற்று வரும் எக்ஸ்பிரஸ் சாலையானது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சமாஜ்வாடி அரசால் திறக்கப்பட்டு உள்ளது,” என்று குற்றம் சாட்டிஉள்ளார்.

மாயாவதி பேசுகையில், “உத்தரபிரதேச முதல்-மந்திரியாக ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையின் கட்டுமானப் பணியை தொடங்கியது நான். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போதே, இந்த சாலையை திறக்க அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் நான் அறிவுரைகளை நிராகரித்தேன், ஏனென்றால் இது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்றுதான்.,” என்று கூறிஉள்ளார். ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையின் பணியானது இன்னும் முடிவடையவில்லை, ஆனால் வரும் தேர்தலில் ஆதாயம் கிடைக்கும் என்று சமாஜ்வாடி அரசு தொடங்கி உள்ளது என்று சாடிஉள்ளார் மாயாவதி.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் உடன், முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் 6-லைன் ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் உன்னோவ்வில் தொடங்கிவைத்தார். ஆக்ரா – லக்னோ இடையிலான எக்ஸ்பிரஸ் சாலையினால் இருநகரங்கள் இடையிலான போக்குவரத்திற்கு ஆகும் கால நேரமானது 3 முதல் 4 மணிவரையில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று லக்னோ- டெல்லி இடையிலான பயண நேரமும் 5-6 மணிநேரங்கள் வரையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மாநில அரசு விடுத்து இருந்த அறிக்கையில் ”302 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டு உள்ள எக்ஸ்பிரஸ் சாலையை 8-லைனாகவும் மாற்றலாம்,” என்று தெரிவிக்கப்பட்டது.

More