அஜித் குமாருடன் நான் நடித்திருக்க வேண்டும்: கணேஷ் வெங்கட்ராமன்

த்ரிஷா நடித்த ‘அபியும் நானும், கமல்ஹாசனுடன் ‘உன்னை போல் ஒருவன் மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு’ உள்பட பல படங்களில் நடித்தவர் கணேஷ் வெங்கட்ராமன். இன்று வெளியாகும் ‘இணையதளம்’ படத்தின் ஹீரோவும் இவர்தான்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் முதல் படத்திலேயே த்ரிஷாவுடன் நடித்தது தனக்கு பெருமை எ’ன்றும், 2வது படத்தில் கமல் மற்றும் மோகன்லாலுடன் நடித்ததால் தான் நிறை கற்று கொண்டதாகவும் கூறினார். கமல் ஒரு உலகத்தரம் வாய்ந்த நடமாடும் பல்கலைக்கழகம் என்றும் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் ஏராளமாக இருக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

நான் சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வந்தேன். எனக்கு அஜீத் சார் தான் ரோல் மாடல். அவரும் சினிமா பின்னணி இல்லாமல் வந்து வெற்றி பெற்றுள்ளார். அஜீத்தை சந்தித்து அறிவுரை பெறும் அளவுக்கு அவருடன் தொடர்பு உள்ளது என்று கணேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தில் அர்ஜூன் கேரக்டரில் நடிக்க தனக்குத்தான் முதலில் வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் அந்த சமயத்தில் தான் அமெரிக்காவில் இருந்ததால் அந்த வாய்ப்பு மிஸ் ஆகிவிட்டதாகவும் கூறிய கணேஷ், இருப்பினும் அஜித் தனது மானசீககுரு என்று கூறியுள்ளார்.