இந்தி நடிகர் ஓம் புரி காலமானார்!

மாரடைப்பு காரணமாக இந்தி நடிகர் ஓம் புரி இன்று காலமானார்.

இந்தி நடிகர் ஓம் புரி மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது திடீரென இன்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் காலமானார். மறைந்த ஓம் புரிக்கு வயது 66. ஓம் புரி திரைப்பட தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் இந்தியில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ஹேராம் படத்திலும் ஓம் புரி நடித்தருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஓம் புரி மறைவுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.