மத்திய பிரதேசத்தில் காதலனின் பிறப்புறுப்பை கத்தியால் அறுத்த பெண்

மத்திய பிரதேசத்தில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற தனது காதலனின் பிறப்புறுப்பை அறுத்த காதலியை போலீசார் கைது செய்தனர்.

மத்தியப்பிரதேசம் மாநிலம், சித்தி மாவட்டத்தில் உள்ள நவ்கவான் கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபரும் கடந்த மூன்றாண்டுகளாக உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளனர்.

வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்களாக இருந்தபோதும், அந்த வாலிபரை ஒரு கோயிலில் வைத்து ரகசியமாக திருமணம் செய்துகொண்ட அந்த இளம்பெண், அந்த வாலிபருடன் பலமுறை படுக்கையை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில், தன்னை ஒதுக்கிவிட்டு, அதே கிராமத்தில் பெற்றோர் நிச்சயித்து வைத்துள்ள வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள தனது காதலன் சம்மதம் தெரிவித்து விட்டதாக தோழிகள் மூலம் அந்த பெண்ணுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடந்த 23-ஆம் தேதி இரவு தாங்கள் எப்போதும் ரகசியமாக சந்திக்கும் இடத்துக்கு அந்த வாலிபரை வரவழைத்த அந்த இளம்பெண், கடைசியாக உங்களுடன் உடலுறவு வைத்துகொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தினார்.

அந்த வாலிபரும் அதற்கு இணங்கி, உச்சகட்ட இன்பத்தில் திளைத்திருந்தபோது, மறைத்து வைத்திருந்த கதிர் அரிவாளால் அவரது பிறப்புறுப்பை வெட்டி, துண்டித்தார்.

வலியுடன், அங்கிருந்து ஓடிய அந்த வாலிபர் யாரிடமும் சொல்லாமல் துடிதுடித்தபடியே இருக்க, அவருக்கு ஏற்பட்ட ரத்தப் போக்கை கண்டு பதற்றம் அடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்ததில், உண்மை வெளியே வந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை மருத்துவமனையில் அனுமதித்த அவரது பெற்றோர், இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இளம் பெண்ணை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.