தயாரிப்பாளரின் மாமனாரை தாக்கிய கன்னட நடிகர் துனியா

மாஸ்திகுடி தயாரிப்பாளரின் மாமனாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கன்னட நடிகர் துனியா விஜயை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் துனியா விஜய். கன்னட திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வருபவர் சுந்தர். இவர் துனியா விஜய் நடிக்கும் ‘மாஸ்திகுடி‘ படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ராமநகர் மாவட்டம் திப்பகொண்டனஹள்ளியில் ஏரியில் நடந்தபோது ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்து வில்லன் நடிகர்கள் 2 பேர் இறந்து போனதால் சுந்தரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சுந்தரின் சகோதரர் சங்கர். இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள். சங்கரின் மனைவி மானசா.

சுந்தர் மற்றும் சங்கர் ஆகியோர் தங்களின் குடும்பத்துடன் சி.கே.அச்சுக்கட்டு பகுதியில் வசித்து வருகிறார்கள். சங்கர்–மானசா ஆகியோருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் முடிந்தது. இந்த நிலையில், மானசாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சங்கர் அவருக்கு தொல்லை கொடுப்பதாக மானசாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வந்துள்ளதாக தெரிகிறது. நேற்று காலையில் மானசாவை பார்க்க அவருடைய தந்தை ஜெயராம் தனது உறவினருடன் சங்கரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஜெயராமுக்கும், சங்கருக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

பெங்களூரு  சி.கே அச்சுகெட்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் துனியா விஜய் நடித்து  வரும் மாஸ்திகுடி படத்தை தயாரித்து வருபவர். சமீபத்தில்  மாஸ்திகுடி  படப்பிடிப்பின்போது 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தையடுத்து சுந்தரை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தயாரிப்பாளர்  சுந்தரின்  சகோதரர் சங்கர் பி. கவுடா. இவரது மனைவி மானஷா. இவர்கள் குடும்ப பிரச்னை பற்றி பேச மானஷாவின் தந்தை ஜெயராம் வந்தார்.

அங்கு மாஸ்திகுடி நடிகர் துனியா விஜய்  மற்றும் அவரது நண்பர்கள் இருந்தனர்.  இதில் துனியா விஜய், முதியவர் ஜெயராமை தாக்கினார். இதுதொடர்பான புகாரின்  பேரில் துனியா விஜயை போலீசார் கைது  செய்தனர்.

More