கல்விக் கடன் வாங்கி செலுத்தாதவர்கள் சொத்துக்கள் முடக்கம்

இன்று 2016 – 2017 ஆம் ஆண்டுகான பெட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விவரித்து வருகிறார்.

அதில், ஒன்றாக கல்விக் கடன் வாங்கிவிட்டு தப்பிச் செல்வோரின் சொத்துக்கள் முடக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் அருண் ஜேட்லி அறிவித்திருப்பதாவது,

ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்படும்.

கல்விக் கடன் வாங்கிவிட்டு தப்பிச் செல்வோரின் சொத்துக்கள் முடக்கப்படும்.

முறையற்ற முதலீடுகளை கண்காணிக்க புதிய சட்டம் செயல்படுத்தப்படும்.

பாதுகாப்புத் துறைக்கு ரூ.2,74,140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.