உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ராம் நரேஷ் யாதவ் இறந்தார்

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ராம் நரேஷ் யாதவ் இறந்தார்

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ராம் நரேஷ் யாதவ்(90), உடல் நலக் குறைவால் நேற்று(நவ.,22) காலமானார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான ராம் நரேஷ் யாதவ், உடல் நலக் குறைவு காரணமாக லக்னோவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், உ.பி., கவர்னர் ராம் நாயக் மற்றும் ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராம் நரேஷ் யாதவ் ம.பி., மாநில கவர்னராக கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016 செப்., வரை பதவி வகித்திருந்தார். வியாபம் முறைகேட்டில் ராம் நரேஷ் யாதவ் மற்றும் அவரது மகன் ஷைலேசுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், ஷைலேஷ் கடந்த வருடம்(2015, மார்ச்) மர்ம மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது

Related Post

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை மீனம்பாகத்தில் அமைந்துள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மிகவும் போக்குவரத்து நெரிசலான ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இந்த…