குஜராத் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள கிம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலையின் குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிற்சாலையில் பணியில் இருந்த ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்கலில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொழுந்துவிட்டு எரியும் தீயால் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்துள்ளது.