கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் திட்டங்கள்: மத்திய அமைச்சர்

கட்டுமானத் தொழிலாளர்களை இஎஸ்ஐ, பிஎஃப் திட்டங்களில் இணைக்க மத்திய அரசு திட்ட மிட்டு வருகிறது என மத்திய தொழி லாளர் நலன் மற்றும் வேலைவாய்ப் புத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நேற்று நடைபெற்ற தொழிலா ளர் தேசிய மாநாடு தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் பேசிய தாவது:

கட்டுமானத் தொழிலாளர் களுக்கும் இஎஸ்ஐ, பிஎஃப் திட்டங் களின் பயன்கள் கிடைக்க அரசு முயற்சி செய்து வருகிறது. சைக்கிள் ரிக்்ஷா டிரைவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர் களும் படிப்படியாக இணைக்கப் படுவார்கள்.

கட்டுமானத் துறையில் ஏராள மாக வசூலிக்கப்படும் மேல்வரி (செஸ்) மாநில அரசிடம் வைப்பு நிதியாக சேர்கிறது. ஆயினும் கட்டு மானத் தொழிலாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படு கிறார்கள், சுரண்டப்படுகிறார்கள்.

மாநில அரசுகள் கட்டுமானத் துறையிடமிருந்து வசூலிக்கப்பட்ட மேல் வரி மூலம் ரூ.27,886 கோடியை வைத்துள்ளன. இவற்றில் 5,800 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதா வது ரூ.22,086 கோடி இன்னும் செலவிடப்படாமல் மாநில அரசு களின் கருவூலத்தில் உள்ளது. இந்த நிதி நியாயமாக கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும்.

உதாரணமாக ஒடிசாவில் கட்டு மானத் துறை மேல்வரி மூலம் ரூ.940 கோடி சேர்ந்துள்ளது. ஆனால், இதுவரை ரூ.120 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. சில மாநிலங் கள் கட்டுமானத் தொழிலாளர்கள் அல்லாதவர்களுக்கும் இந்த நிதி யைப் பயன்படுத்துகிறது. சில மாநிலங்கள் கட்டுமானத் தொழி லாளர்களுக்கு மிதிவண்டியை வழங்குகின்றன. அது முன்னுரிமைப் பொருள் அல்ல.