சினிமா பாணியில் மகளை காப்பாற்றிய பாசக்கார தந்தை!

கன மழை காரணமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பங்கி சதிபாபு (30) என்பவர் உடல்நிலை சரியில்லாத தனது 6 மாத மகளை காப்பாற்றுவதற்காக, கழுத்தளவு வெள்ளத்தில், தலைக்கு மேல் மகளை தூக்கிக் கொண்டு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கழுத்தளவு நீரில் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தனது குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பங்கி சதிபாபு சேர்த்திருக்கிறார். தனது உயிரையும் பொருட்படுத்தாது சதிபாபு மகளை தூக்கிக் கொண்டு சென்றதை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.