பிரபல நறுமணப் பொருள் தயாரிப்பாளர் மோனிகா குர்தே பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை

கோவாவை சேர்ந்தவர் மோனிகா குர்தே( வயது 39)பிரபல நறுமண பொருள் விற்பனையாளர் மற்றும் தயாரிப்பாளர். இவர் சாங்கோல்டா கிராமத்தில்  3 படுக்கையறைகள் கொண்ட  வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்து வந்தார்.கடந்த ஜூலை மாதம் தான் பொர்வோரிம்மில் கிராமத்தில் இருந்து இங்கு இடம்மாற்றி வந்து உள்ளார்.இந்த கிராமம் பிரபல சுற்றுலா தலமான காலன்குயிட்  கடற்கரை அருகே உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு யாரோ மர்ம மனிதர் வீட்டில் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு வீட்டை கொள்ளையடித்து சென்று உள்ளனர். மோனிகாவின் உடல் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உடலில் இருக்கும் காயங்களை பரிசோதனை செய்த காவல்துறையினர், அவை பாலியல் துன்புறுத்தலின் போது ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் மோனிகா பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர். தற்போது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காவல்துறையினர் கூறுகையில், மோனிகா குர்தே கணவர் வெளியே சென்றிருந்ததை நோட்டமிட்ட சிலர் வீடு புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயற்சி செய்திருக்கலாம். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை படுக்கையிலே கை ,கால்களை கயிற்றால் கட்டி பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம். வீட்டில் உள்ள நகை பணம் கொள்ளை யடிக்கப்படவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடக்கிறது என்றார்.