பிரபல நடிகை ரதி அக்னிஹோத்ரி மீது திருட்டு வழக்கு!

பிரபல நடிகை ரதி அக்னிஹோத்ரி மீது திருட்டு வழக்கு!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்திருப்பவர் ரதி. திருமணமாகி தற்போது மும்பையில் வசித்து வரும் இவர் மீது மின் திருட்டு வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளார்கள்.

மின்வினியோகம் செய்யும் நிறுவனமான ‘பெஸ்ட்’ என்ற நிறுவனம் சந்தேகத்தின் பேரில் ரதியின் வீட்டில் சோதனை நடத்திய போது, அவரது வீட்டில் உள்ள மின் மீட்டரை ஓடவிடாமல் செய்து நூதன முறையில் மின்திருட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் ரதியின் வீட்டில் ரூ.48 லட்சத்து 97 ஆயிரத்திற்கு மின் திருட்டு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

பெஸ்ட் கழகத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சந்தேகம் ஏற்பட்டால் யார் வீட்டில் வேண்டுமானாலும் சோதனை நடத்த ‘பெஸ்ட்’ நிறுவனத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

நடிகர் வினுசக்ரவர்த்தி மரணம்!

நடிகர் வினுசக்ரவர்த்தி மரணம்!

பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி (74) சென்னையில் போலிஸ் சப் -இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா…