விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு

விடுதலைப்புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளின் மீதான தடை விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் அதிரடி முடிவெடுத்துள்ளது.

இரண்டு அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து நீக்க முதன் முறையாக ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் தடை நீக்கம் தொடர்பாக இலங்கை மற்றும் இஸ்ரேலிடம் கருத்து கேட்டிருந்தது.

இரு நாடுகளும் குறித்த அமைப்புகளின் மீதான தடையை நீக்க கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், இரு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தடைப்பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் மற்றும் ஹமாஸ்அமைப்புகளின் பெயர்களை நீக்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.