மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் பியூஸ் கோயலை சந்திக்கிறார்

மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று மாலை மத்திய மின்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து அவர் பேச உள்ளார்.

மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். மத்திய மின்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து அவர் பேச உள்ளார்.

மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழகம் சேர்வது குறித்து விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. உதய் திட்டத்திற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மின்துறை அமைச்சர் தங்கமணியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.