நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை 355 காசுகளில் இருந்து 360 காசுகளாக உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 355 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 360 காசுகளாக உயர்ந்து உள்ளது.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 355 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 360 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. புரட்டாசி, மூன்றாம் சனிக்கிழமை முடிந்துள்ளதாலும், கர்நாடகாவுக்கு லாரி போக்குவரத்து துவங்கியதாலும், முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. அதனால், முட்டை விலையும் உயர்ந்துள்ளது. இனி விலை உயரும் என்பதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:– சென்னை–365, ஐதராபாத்–345, விஜயவாடா, தனுகு–363, பார்வாலா–354, மும்பை–390, மைசூரு–358, பெங்களூரு–355, கொல்கத்தா–412, டெல்லி–353.

முட்டைக்கோழி கிலோ ரூ.74–க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.77–ஆக உயர்ந்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.65–க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.