பலத்த மழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் தாமதமாக சென்றன

சென்னை, மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை சுமார் அரை மணி நேரம் பெய்த கன மழையால் ஓடுபாதையில் குளம்போல் மழை நீர் தேங்கியது. இதனால் 12 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

சென்னையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் விமானங்களுமு, உள்நாட்டு விமானங்களான கொல்கத்தா, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் விமானங்கள் வந்து செல்வதில் சிரமமம் ஏற்பட்டது, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து, மழை ஓய்ந்த பிறகு ஓடுபாதையில் தேங்கியிருந்த மழைநீரை ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றிய பிறகுதான், இந்த விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன. தரையிறங்க வேண்டிய 12 விமானங்கள் தாமதமாக வந்ததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.