பெண் நோயாளியை கற்பழித்த டாக்டர்!

குஜராத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையிள் பெண் நோயாளியை டாக்டர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சேர்ந்து கற்பழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

21 வயதுடைய அந்தப்பெண், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த வார்டில் இரவு பணியில் இருந்த டாக்டர் ரமேஷ் சவுகான் (28), சில போதை மருந்துகளை அந்த பெண்ணிற்கு கொடுத்து, தடைசெய்யப்பட்ட பகுதியில் அவரை அழைத்துச் சென்று, அரை மயக்கத்தில் இருந்த அவளை கற்பழித்துள்ளான். பின்னர் மருத்துவமனை ஊழியர் ஒருவனும் அந்த டாக்டருடன் சேர்ந்துகொண்டு இரு நாட்களாக அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த டாக்டர் மற்றும் மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.