கருணாநிதி உடல் நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி, உடல் நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராசாத்தி அம்மாள், திமுக பொருளாளர் ஸ்டாலின், பொன்முடி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு உடன் சென்றுள்ளனர்.

கடந்த மாதம் 25 ஆம் தேதி ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, யாரையும் சந்திக்காமல் வீட்டில் ஓய்வில் இருந்தார். மேலும், கடந்த ஒரு மாதமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதையும் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் திடீரென மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், திமுக தொண்டர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.