இயக்குனர் சங்கம் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

”Directors club” என்பது உதவி இயக்குனர்களின் வாட்சாப் குழுவாகும்.

இந்த குழுவினை, இயக்குனர் திரு.மகிழ்திருமேனி உதவியாளர் திரு. சக்தி அவர்கள் ஒருங்கிணைக்கிறார்.

இந்த குழுவை பற்றி சக்தி குறியதாவது :

நான் முதன்முதலில் எனக்கு தெரிந்த உதவி இயக்குனர்களை கொண்டு ஒரு சின்ன வாட்சாப் குழு ஆரம்பித்தேன். எங்களுக்கு தோன்றும் சிறு சிறு சந்தேகங்களை இந்த வாட்சாப் குழுவின் மூலம் தீர்த்து கொண்டோம்.

பிறகு எங்களுக்கு எழுந்த இயக்கம் பற்றிய மிகப்பெரிய சந்தேகங்களை தெரிந்து கொள்ள ஆர்வமடைந்து, பிறகு ”இயக்குனர் திரு. மகிழ்திருமேனி” அவர்களை குழிவில் சிறப்பு விருந்தினராக அழைத்தோம் அவரும் வாட்டாப் மூலம் எங்களுடைய சந்தேகங்களுக்கு 2 மணி நேரம் வாட்சாப்பில் பதிலளித்தார் இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது.

இதனால், சினிமா துறைகளின் மற்ற துறைகளான ஒளிப்பதிவு, இசை, கலை, சண்டை உள்ளிட்ட ”24” துறைகளிலும் எங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை அந்த துறையில் சிறந்து விளங்கும் ஜாம்பவான்களை கேட்டோம் அவர்களும் எங்களது வாட்சாப் குழுவில் பதிலளித்தனர்.

இதை கேள்விபட்ட ஏராளமான உதவி இயக்குனர்கள் எங்கள் குழுவில் சேர்ந்தனர்.இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழுவிலிருந்து தற்போது சில இயக்குனர்கள் தங்களுக்கான உதவி இயக்குனர்களை தேர்ந்தெடுத்திருப்பது எங்கள் குழுவிற்கான தனிச் சிறப்பாகும்.

இந்த குழுவில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற சில சினிமா பிரபலங்கள். இந்த குழுவிலேயே நிரந்தரமாக இருக்கிறார்கள்.எங்கள் குழுவிற்கு பக்கபலமாக ”இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்” இருக்கிறார்.இந்த குழுவில் உறுப்பினராக சேர சில நிபந்தனைகளை வைத்துள்ளோம் காரணம் எங்கள் குழு பிளவு பட கூடாது என்பதற்காக என்கிறார் இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் சக்தி.

இந்த குழுவின் முதலமாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு எங்களை வாழ்த்தி ”Directors club”- லோகவை வெளியிட்ட நடிகர்கள் அமித் பார்கவ், பிரின்ஸ், கணேஷ் பாபு, பிர்லா போஸ் மற்றும் இயக்குனர் தியா, இசையமைப்பாளர் சுதர்சன், எடிட்டர் மணிகண்ட பாலாஜி மற்றும் தயாரிபாளர் அவர்களுக்கு நன்றி. மேலும், கலந்துகொள்ள இயலாமல் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்த இயக்குநர்கள் மகிழ்திருமேனி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு நன்றி என்றார்.

Related Post