நடிகை நயந்தராவுக்கு வில்லனாக இயக்குனர் கெளதம் மேனன்

சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும் தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களை இயக்கி வரும் கெளதம் மேனன், அடுத்ததாக நயந்தரா நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.

ஒரே ஒரு பாடல் மட்டுமே ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் பாக்கியுள்ள நிலையில், தனுஷ் உடனான படமும் முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து கெளதம் மேனனை, நயந்தரா – அதர்வா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் வில்லன் வேடத்தில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கும் திரில்லர் படமாக உருவாகிறது. இதில் இயக்குநர் கெளதம் மேனனை வில்லனாக நடிக்க வைக்க இயக்குநர் அனுகியுள்ளார். தற்போது பேச்சுவார்த்தை அளவில் இருக்கும் இம்முயற்சிக்கான வெற்றி விரைவில் கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கெளதம் மேனன் தான் இயக்கும் படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து போவார், ஆனால், முழு நடிகராக அவர் நடிக்க இருக்கும் படம் இதுதான்.