தர்மபுரி இளவரசன் மர்மமான மரணம் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

தர்மபுரியில் மர்மமான முறையில் இறந்த இளவரசன் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், நத்தம் காலனி பகுதியைச் சேர்ந்த இளவரசன், அருகில் உள்ள செல்லங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யாவை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்தார். இந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு தருமபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இளவரசன் இறந்து கிடந்தார்.

இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், வழக்கு விசாரணையில், இதுவரையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என இளவரசனின் தந்தை இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இளவரசன் மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டது.