டெல்லியில் அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து

டெல்லியில் அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து

டெல்லியில் இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்றுபேர் பரிதாபமாக பலியாகினர். பத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மோஹன் பார்க் பகுதியில் உள்ள அந்த கட்டிடத்தில் காலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்து பத்திற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் மூன்றுபேர் உடல் கருகி உயிரிழந்ததாகவும், பத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை மீனம்பாகத்தில் அமைந்துள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மிகவும் போக்குவரத்து நெரிசலான ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இந்த…