டெல்லி மெட்ரோவில் பெண்கள் தற்காப்புக்காக கத்தி கொண்டு செல்ல அனுமதி

டெல்லி மெட்ரோவில் பெண்கள் தற்காப்புக்காக கத்தி கொண்டு செல்ல அனுமதி

டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்போது அவர்கள் கத்தி எடுத்துச் செல்ல மத்திய பாதுகாப்பு படை அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி கூறும்போது, “டெல்லியில் மெட்ரோ ரயில் பயணங்களின்போது பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கத்தி கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நான்கு இன்ச்க்கு குறைவான அளவுள்ள கத்திகளை பெண்கள் வைத்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

அதே போன்று ரயில் பயணிகள் தீப்பெட்டிகள் மற்றும் லைட்டர் கொண்டுச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு பயணி ஒரே ஒரு தீப்பெட்டிதான் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்.

முன்னதாக மெட்ரோ ரயில்களில் சில பொருட்களால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக அவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு சில பொருட்களுக்கு மத்திய பாதுகாப்பு படையினர் விலக்கு அளித்துள்ளனர்.

Related Post

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை மீனம்பாகத்தில் அமைந்துள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மிகவும் போக்குவரத்து நெரிசலான ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இந்த…