சாவடி படத்திற்காக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நடன இயக்குனர் ஸ்ரீதர்

 [wp-review id=”3679″]

சாவடி படத்திற்காக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நடன இயக்குனர்

 சாவடி படத்திற்காக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நடன இயக்குனர்

800 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணிபுரிந்த ஸ்ரீதர் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். சாவடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை இன்று ஏ.வி.எம் இல் தொடங்கியது. இப்படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார் ஸ்ரீதர். படத்தை பற்றி இவர் கூறுகையில்,

இன்றைய காலத்தில் செல்போன் எப்படி தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டதோ, அதே போல் பைக் இளைஞர்கள் மத்தியில் நகமும் சதையுமாக ஒன்றிவிட்டது. குறிப்பாக ஸ்ட்ரீட்ரேஸ் பைக் என்றால் இளைஞர்களுக்கிடையே தனி உற்சாகமே வந்துவிடும். ஸ்ரீதர் இயக்கவிருக்கும் இந்த புதிய படமும் இளைஞர்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகிறது. சாலைகளில் வேகமாக செல்லும் இளைஞர்கள் அதன்பின் விளைவுகளை பற்றி கவலைப்படுவதில்லை மேலும் இதனால் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றிய கதையே இந்தபடம். இப்படி ஒரு விழிப்புணர்வு சார்ந்த படத்தை இயக்க என்னை தூண்டியது என் கண் எதிரே நடந்த விபத்து ஒன்றுதான் காரணம்.

இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 7 வருடம் ரேசில் ஈடுபடும் இளைஞர்களுடன் என்னுடைய நேரத்தை செலவழித்திருக்கிறேன். இந்த படத்துக்காக மொத்தம் 50 இளைஞர்களை நான் தேர்வு செய்து வைத்திருந்தேன். அதில் டில்லிகணேஷ் என்ற இளைஞர் நிஜமாகவே ரேஸில் ஈடுபடும்போது இறந்துவிட்டார் என்ற தகவல் வந்த போது மிகவும் வருந்திவிட்டேன்.  மொத்தம் 45 முதல் 50 நாட்கள் வரை இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறோம். வருகிற 18ம் தேதி தொடங்கி ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இப்படம் ஜூலையில் திரைக்குவருகிறது.

இப்படத்தில் நடிகை ஷில்பா, மொட்டை ராஜேந்திரன், பிண்டு, ஜித்தேஷ், தீரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Visit Chennaivision for More Tamil Cinema News

[wp-review id=”3679″]

Similar Tags:

ரித்திகா சிங்கிற்கு கிடைத்த தேசிய விருது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை

ராஜா மந்திரி தயாரிப்பாளரான ஒளிப்பதிவாளர் தயாரிப்பாளர் PG முத்தையா

முதல்ல தியேட்டர் கேன்டீன்களில் பாப்கார்ன் விலையைக் குறைங்கப்பா! – சுரேஷ் காமாட்சி ‘பொளேர்’!

தமிழ் நடிகைகளை தொடர்ந்து புறக்கணிக்கிறார்களே! – ஒரு இளம் நாயகியின் வேதனை

7 நாட்கள் திரைப்படத்தின் கதை மிக சிறந்த கதை பி.வாசு பேச்சு

நட்சத்திர கிரிக்கெட் வடிவேலு வராதது ஏன்?

லிபரா நட்சத்திர கிரிக்கெட் போட்டி கோலாகலமாக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்கியது