கால் பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனோல்டோவை தக்க வைத்துக் கொள்ள ரியல் மாட்ரிட்

போச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன், கிறிஸ்டியானா ரொனோல்டோ, ஸ்பெயின் நாட்டு கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.

வரும் 2018 ஆம் ஆண்டு அரை அந்த அணிக்காக விளையாட ஒப்பந்தம் போட்டுள்ள ரொனோல்டோவை, வாங்க சில கிளப் அணிகள் ஆலோசித்து வந்த நிலையில், அவரை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக ரியல் மாட்ரிட், மேலும் 5 ஆண்டுகளுக்கு அவருடம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

அதன்படி, வரும் 2021 ஆம் ஆண்டு வரை ரொனோல்டோ, ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட உள்ளார். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடம் நிகழ்ச்சி நேற்று, சாண்டியாகோ பெர்னாபீ ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ரியல் மாட்ரிட் கிளப் அணி தலைவர் புளோரண்டினோ பெரேஸ், மற்றும் கிறிஸ்டியானா ரொனோல்டோ, பங்கேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.