கிரிக்கெட்டில் சிவப்பு அட்டை பயன்படுத்த முடிவு

கால்பந்து மற்றும் ஹாக்கி போட்டிகளில் வீரர்கள் ஒழுங்கினமாக நடந்துக் கொண்டால், அவர்கள் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்படுவார்கள்.

அத்தகைய முறை கிரிக்கெட் போட்டியிலும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை பரிந்துரை செய்யும், ‘மெர்லிபோர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) ஐ.சி.சி யிடம் பரிந்துரை செய்துள்ளது.

கிரிக்கெட் போட்டியின் புதிய விதிமுறைகள் குறித்து ஆராய்ந்து, ஐ.சி.சி-க்கு தெரியப்படுத்தும் இந்த எம்.சி.சி கிளப்புக்கு தலைவராக மைக் பிரியர்லே இருக்கிறார். தலைமை நிர்வாகிகளாக ஜான் ஸ்டெப்ஹன்சன் உறுப்பினர்களாக ரிக்கி பாண்டிங், ரமீஸ் ராசா ஆகியோர் உள்ளனர்.

சிவப்பு அட்டை முறையை அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ள இந்த கிளப், ‘பேட்’ அளவு குறித்தும் யோசனை தெரிவித்துள்ளது.