எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் அருந்ததி பதவி விலக வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்தியாவில் எஸ்.பி.ஐ வங்கிகளின் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கார்டின் பின் எண்ணை மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெபிட் கார்டு தகவல் திருட்டை தொடர்ந்து எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் அருந்ததி படாச்சார்யா பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும், என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

நாட்டில் உள்ள 70 லட்சம் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 19 வங்கிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்த தகவல் திருட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய முறைகேடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த திருட்டுகளின் தாயகமாக எஸ்பிஐ வங்கி இருந்துள்ளது. எனவே இந்த திருட்டிற்கு பொறுப்பேற்று எஸ்பிஐ வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.