சென்னையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறப்பு!

சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் சென்னை வடபழனியும் ஒன்று. அதுவும் வடபழனி பேருந்து நிலையத்தில் இருந்து கோடம்பாக்கத்திற்கு வரும் போது, 100 அடி சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூராக இருக்கும்.

இத்தனைக்கும் அவ்வழி ஒரு வழி பாதையாக மாற்றிய அமைக்கப்பட்டாலும், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் மட்டும் குறைந்தபாடில்லை. இதையடுத்து, வடபழனி 100 அடி சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் மேல்பட்ட ரயில் பாதைக்கு கீழ், மேம்பாலம் ஒன்று கட்டும் பணி தொடங்கியது.

கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்த இந்த பணிகள் அனைத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இருப்பினும், பாலம் மட்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், வடபழனி 100 சந்திப்பு புதிய இரு வழி மேம்பாலம் இன்று காலை முதல் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடபழனி பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன்

கிழக்கு கடற்கரை சாலையில், தமிழக அரசிடம் உள்ள சுமார் 150 கி.மீ சாலையை மத்திய அரசிடம் ஒப்படைத்தால், அதை நான்கு வழிச்சாலையாக மாற்ற முடியும், என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாவை நேற்றூ சந்தித்து ஆலோசனை நடத்திய பொன்.ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் முக்கிய சாலை, கட்டுமானத் திட்டங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தினேன்.

கிழக்கு கடற்கரை சாலையை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன்

கிழக்கு கடற்கரை சாலையை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன்

குறிப்பாக, குளச்சலில் வர்த்தக துறைமுகம் வர வேண்டிய அவசியம் குறித்து பேசினேன். குளச்சலில் மீன்பிடித் துறைமுகம் அமைவதற்கு முன்பே அது குறித்து மீனவ சமுதாயத்தினர் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் சுட்டிக்காட்டினார். அந்தத் திட்டத்தால் மீனவர்கள் மிகவும் பலன் அடைவர் என்பதை அவரிடம் விளக்கினேன்.

கேரளத்தில் உள்ளது போல தமிழகத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அந்த மையம் அமைக்க சுமார் 272 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் என்றும், அந்த இடம் கிடைத்தால் ரப்பர் ஆராய்ச்சி மையத்தை உருவாக்க மத்திய அரசு தயார் என்றும் கூறினேன். இது பற்றி விரைவில் அதிகாரிகளுடன் பேசி முடிவெடுப்பதாக முதல்வர் கூறினார்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் சுமார் 150 கி.மீ. தூரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தச் சாலையை மத்திய அரசிடம் அளித்தால், கிழக்கு கடற்கரைச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற முடியும் என்பதையும் முதல்வரிடம் தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Visit Chennaivision for More Tamil Cinema News

கோ 2 டிரெய்லர்

கோ 2 டிரெய்லர்

இயக்குனர் : சரத்

நடிகர்கள் : பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, பாலா சரவணன், இளவரசு, ஜான் விஜய், கருணாகரன், பரத் ரெட்டி, மயில்சாமி, கிரேன் மனோகர், நாசர், ஷான்

இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

Visit Chennaivision for More Tamil Cinema News

உனக்குள் நான் டிரைலர்

உனக்குள் நான் டிரைலர்

இயக்குனர் : G. வெங்கடேஷ் குமார்

நடிகர்கள் : சஞ்சித், கார்த்திக், நாகராஜன், அப்பாராவ், பக்கிரிசாமி

இசை அமைப்பாளர் : டோனி பிரிட்டோ

Visit Chennaivision for More Tamil Cinema News

ஒய் டிரெய்லர்

ஒய் டிரெய்லர்

இயக்குனர் : பிரான்சிஸ்  மார்க்கஸ்

நடிகர்கள் : கீதன் பிரிட்டோ, ஈஷா, பாப்ரி க்ஹோஷ், அர்ஜுனன் நந்தகுமார், சங்கிலி முருகன், நகிநீடு, நீலிமா ராணி, நந்தா சரவணன், வர்ஷா குமார், கரதே ராஜா, தமிழ் செல்வி

இசை அமைப்பாளர் : இசைஞானி இளையராஜா

Visit Chennaivision for More Tamil Cinema News

தெறி டிரெய்லர்

தெறி டிரெய்லர்

இயக்குனர் : அட்லி

நடிகர்கள் : விஜய், சமந்தா, அமி ஜாக்சன், J. மகேந்திரன், பேபி நைநிகா, பிரபு, ராதிகா சரத்குமார், ராஜேந்திரன், மனோபாலா, ஸ்ரீகுமார், அழகம் பெருமாள், Stun  சிவா, காலி வெங்கட், சுவாமிநாதன், கல்யாணி நடராஜன், சுகுந்தன், ரின்ழ்  நிதிக், சாந்தி மணி, Boxer தீனா, பிநீஷ்  பாஸ்டின், லோபோ, மனோஜ், கார்த்திக் சசிதரன், T. முத்துராஜ், சுனைனா, திவ்யா சாஷா

இசை அமைப்பாளர் : G. V. பிரகாஷ் குமார்

Visit Chennaivision for More Tamil Cinema News