முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து சென்னை வரவில்லை

முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து சென்னை வரவில்லை

இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்று முதல்வர் ஓ.

பன்னீர் செல்வம் வலியுறுத்தினார். ஆனால், ஜல்லிக்கட்டு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், தற்போது அது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது, என்று பிரதமர் மோடி கூறிவிட்டார்.

இதன் மூலம், முதல்வர் பன்னீர் செல்வத்தின் டெல்லி பயணம் தோல்வியடைந்ததால், போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ஓபிஎஸ், “ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்” என்று கூறினார்.

இந்த நிலையில், இன்று மாலை சென்னை திரும்புவதாக இருந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

அதே நேரத்தில் டெல்லியில் உள்ள வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவசர சட்டம் இயற்ற முடியுமா

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசே அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியுமா என அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Related Post

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை மீனம்பாகத்தில் அமைந்துள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மிகவும் போக்குவரத்து நெரிசலான ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இந்த…