முதல் அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் அடைந்தார்: பிரதாப் ரெட்டி

தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது பூரண உடல் நலத்துடன் உள்ளார். அவர் விரும்பும் போது வீட்டுக்குத் திரும்பலாம் என்று அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரதாப் ரெட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண குணமடைந்து நலமாக இருக்கிறார்.

ஜெயலலிதாவுக்கு தீவிர உடல் நலப் பிரச்னை எதுவும் இல்லை. எனவே தான் அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.

பிஸியோதெரப்பி சிசிச்சையின் பலனாக அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் நல்ல முறையில் செயல்படுகிறது. ஜெயலலிதா மன வலிமை மிக்கவர். அந்த மன வலிமை தான் அவரது உடல்நிலை வேகமாக சீரடையக் காரணம்.

அவர் எப்போது விரும்புகிறாரோ அப்போது வீட்டுக்குச் செல்லலாம் என்று பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.