சென்னையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக திறப்பு!

சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் சென்னை வடபழனியும் ஒன்று. அதுவும் வடபழனி பேருந்து நிலையத்தில் இருந்து கோடம்பாக்கத்திற்கு வரும் போது, 100 அடி சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூராக இருக்கும்.

இத்தனைக்கும் அவ்வழி ஒரு வழி பாதையாக மாற்றிய அமைக்கப்பட்டாலும், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் மட்டும் குறைந்தபாடில்லை. இதையடுத்து, வடபழனி 100 அடி சாலை சந்திப்பில் மெட்ரோ ரயில் மேல்பட்ட ரயில் பாதைக்கு கீழ், மேம்பாலம் ஒன்று கட்டும் பணி தொடங்கியது.

கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்த இந்த பணிகள் அனைத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இருப்பினும், பாலம் மட்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், வடபழனி 100 சந்திப்பு புதிய இரு வழி மேம்பாலம் இன்று காலை முதல் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடபழனி பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.