சந்திரஹாசன் மனைவி கீதாமணி காலமானார்!

சந்திரஹாசன் மனைவி கீதாமணி காலமானார் வயது 73 .இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் நடைபெறும்.

சந்திரஹாசன் மனைவி கீதாமணி மாரடைப்பால் நேற்று இரவு உயிரிழந்தார். நடிகர் கமலஹாசன் அண்ணன் சந்திரஹாசன். இருடைய மனைவி கீதாமணி(73). கீதாமணி கடந்த சில தினங்களாக உடநலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது உடல் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.