மத்திய அரசின் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு வெங்கய்யா நாயுடு அறிவிப்பு!

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வவத்திற்கு தான் மத்திய அரசின் ஆதரவு என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதிமுக சட்டமன்ற உறுப்பினார்கள் அனைவரின் ஆதரவோடு பன்னீர்செல்வம் முதல்வரானார்.

ஏற்கனவே இரண்டு முறை ஜெயலலிதா sirai சென்ற பொழுது பன்னீர்செல்வத்தையே இடைக்கால முதல்வராக ஜெயலலிதா நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக தலைமையில் பல்வேறு உட்கட்சி பூசல்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

இந்நிலையில் அதிமுக வில் உட்கட்சி பூசல்கள் எதுவாக இருந்தாலும் சரி,நாங்கள் அதில் தலையிட விரும்பவில்லை.மத்திய அரசின் ஆதரவு தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கே .அவர் ஓ.பன்னீர்செல்வம் தான்.

அவர் ஏற்கனவே ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.முதலமைச்சராக உள்ள அவரைத் தான் நங்கள் தொடர்பு கொள்வோம் என்று வெங்கய்யா நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.