கோவையில் பிரமாண்ட வால்வோ கார் திறப்பு விழா

வால்வோ கார் நிறுவனத்தின் பிரமாண்ட ஷோரூம் கோயமுத்தூரில் திறக்கப்பட்டுள்ளது. 23.11.2012 வெள்ளியன்று நடந்த இவ்விழா பற்றிய விவரம் வருமாறு. உலகப் புகழ் பெற்ற வால்வோ கார் ஷோரூம்கள் இந்தியாவில் ஏற்கனவே ஏழு இடங்களில் உள்ளன. இந்தியாவில் எட்டாவதுதாகவும் தமிழ்நாட்டில் இரண்டாவதாகவும் கோவையில் திறக்கப்பட்டுள்ளது.

இது தென்னிந்தியாவிலேயே பிரமாண்டமானதாகும்.

கோவை சின்னயம்பாளையத்தில் பார்க் பிளாசா,லீ மெரிடியன் ஓட்டல்கள் அருகே இது திறக்கப்பட்டுள்ளது.சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரி திரு.எம்.ரவி.ஐ.பி.எஸ். அவர்கள் ரிப்பன் வெட்டி ஷோரூமைத் திறந்து வைத்தார்.

வால்வோ நிறுவன சி.எப்.ஓ.திருமதி.சினேகா ஓபராய் குத்துவிளக்கேற்றினார். அவருடன் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து விளக்கேற்றினர்.

வால்வோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.தாமஸ் எர்னபெர்க் அனைவரையும் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில் ‘வால்வோ கார்கள் ஸ்வீடன் நாட்டிலிருந்து பாதுகாப்பான கார் என்று நிரூபணம் செய்யப்பட்டதாகும். 1920களில் முதல் தயாரிப்பை அறிமுகம் செய்தது. உலக நாடுகளில் புகழ்பெற்ற இது. இந்தியாவுக்கும் 2008ல் வந்தது.

வேகத்தைப் போல பாதுகாப்புக்கும் முக்கியமான முன்னுரிமை கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஷோரூம் தென்னிந்தியாவில் மிகப்பெரியதாகவும். இதை புதுமைகளையும் வசதிகளையும் வரவேற்கும் கோயம்புத்தூரில் திறப்பதில் பெருமைப்படுகிறோம்.

வால்வோ இப்போது நான்கு மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.S60,S80,XC60,XC90 என நான்கு மாடல்கள். ஒவ்வொன்றும் பாதுகாப்பிலும் வசதியிலும் தனித்தனி வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்காரும் ஸ்வீடனிலேயே வடிவமைத்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறன.உலகின் எந்த நாட்டுக்கு சென்றாலும் வால்வோ கார் அதே தரத்துடன் கிடைக்கும்.

வால்வோ கார்களில் சிட்டி சேப்டி சிஸ்டம் என்கிற பாதுகாப்பு அம்சம் உள்ளது. இது லேசர் தொழில்நுட்பம் இணைந்தது. உலகில் 70 சதவிகித விபத்துக்கள் 30.கி.மீ வேகத்திற்குக் கீழ் செல்லும் போது ஏற்படுவதாக புள்ளி விவரம் உள்ளது.

30 கி.மீ. வேகத்தில் செல்லும்போது எதிரே யாராவது வரும்போது பதற்றத்தில் பிரேக் தவறி ஆக்சிலேட்டரை மிதித்து விட்டாலோ இந்த லேசர் உதவியால் தானே பிரேக் சிஸ்டம் இயங்கி காரை நிறுத்தி விடும்.

அது மட்டுமல்ல வால்வோ களில் உள்ள கண்ணாடிகள் 360 டிகிரி லாமினேட் செய்யப்பட்டவை. பெரிய மோதல் நேர்ந்தாலும் பாதிக்காதவை. XC90 ரக கார்களில் போரான் ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது. இது இரும்பை விட 5 மடங்கு வலுவானது.

XC60 ரகக் கார்கள் இந்தியாவுக்கு 2011ல் அறிமுகம் ஆனது. இது மிகமிக பாதுகாப்பானது. 50 விருதுகள் பெற்றுள்ள மாடலாகும்.

பாதுகாப்புக்கு உத்திரவாதம் உள்ளதால் இதன் விலைபற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

வால்வோ கார் 33 லட்சத்திலிருந்து கிடைக்கின்றன என்று கூறினார். திரு.எம்.ரவி,ஐ.பி.எஸ் அவர்கள் பேசுகையில்.

‘வால்வோ உலகப் புகழ் பெற்ற கார். நியூசிலாந்து நாட்டில் 40 லட்சம் பேர் தான் இருக்கிறார்கள். அங்கு பெரும்பாலும் இந்தக் காரைத் தான் பயன்படுத்துகிறார்கள். காரணம் இது மிகவும் பாதுகாப்பானதாக இருப்பதுதான்.எனக்கும் இந்தக் காரை மிகவும் பிடிக்கும்.

கோவையில் இதன் ஷோரூமைத் திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நான் திறந்து வைத்த எதுவும் சோடை போனதில்லை. இதுவும் பெரிய வெற்றி பெறும். கோவையில் இதை ஆரம்பித்துள்ள சிவகணேஷ் துடிப்பானவர். பல இளைஞர்களுக்கு வழிகாட்டி வருபவர். அவர் முயற்சி பெரிய வெற்றி பெறும்’ என்று வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் வால்வோ நிறுவன விற்பனைப் பிரிவு இயக்குநர் ப்ரவீன் குமார். விற்பனை பிரிவின் அடுத்த நிலை இயக்குநர் ஷாஜி மேத்யூ, மார்க்கெட்டிங் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் சந்தீப் நாராயணன்.

கோவையில் உள்ள ‘வால்வோ ஆர்டிமிஸ் கார்ஸ்’ ஷோரூமின் நிர்வாக இயக்குநர் ஆர்.டி.சிவகணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருமதி புண்ணியா ஸ்ரீ நிவாஸின் வீணை இசைக் கச்சேரி நடைப்பெற்றது.

ஷோரூம் திறப்பு விழா நடைபெற்ற பிறகு மாடல் அழகிகள் புடைசூழ வால்வோ கார் அறிமுக ஊர்வலம் நடைபெற்றது. இதை பொதுமக்கள் ஆவலுடன் கண்டு ரசித்தனர்.

புதிய வண்ணாரப்பேட்டையில் யமாஹா விற்பனை மையம் துவக்கம்

SVD Group யமாஹா விற்பனையகத்தைத் தொடங்கியிருப்பதன் மூலம் ஆட்டோமொபைல் துறையிலும் வெற்றிகரமாக கால்பதித்துள்ளது.  இது குறித்து வால்ட்டர் ஃபிலிப் ஜெயச்சந்திரன் – இயக்குனர் எஸ் வி டி மோட்டார்ஸ் பிரைவேட் லிமிட்டட் கூறும் போது,“பெருகி வரும் இரண்டு சக்கர வாகனத்தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டும்வடசென்னை மக்கள் சுலபமாக இரண்டு சக்கர வாகனங்களைக் குறிப்பாக இளைஞர்களின் ஃபேவரைட்டாகத் திகழும் யமாஹா பைக்குகளை வாங்கும் பொருட்டும் புதிய வண்ணாரப்பேட்டையில் வால்ட்டர்ஸ் யமாஹா என்கிற 9000 சதுர அடி விற்பனை வளாகத்தைத் திறந்திருக்கிறோம்… சர்வீஸ் செண்டரை ராம் – Zonal manager , Yamaha, உதிரி பாகங்கள் பிரிவினை மோகன் ராஜ் regional manager Yamaha ஆகியோர் திறந்து வைத்தார்கள். எடிட்டர் மோகனும் அவரது மகன் இயக்குனர் எம் ராஜாவும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்…SSS Sales , Service and Spares வசதியுடன் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை வழங்கக் காத்திருக்கிறோம்..”

இளைஞர்களை அதிகம் கவர்ந்த யமாஹா பைக்குகள் இப்பொழுது தனது யமாஹா ரே ஸ்கூட்டர்கள் மூலம் யுவதிகளையும் குறிவைத்திருக்கிறது. புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த டி ரமேஷ் முதல் வாடிக்கையாளராக Yamaha FZ S Blue Limited Edition பைக்கிற்கு முன்பதிவு செய்தார். முன்பதிவிற்கும் வால்ட்டர்ஸ் யமாஹாவைப் பற்றித் தெரிந்து கொள்ளவும்  044-25910222/9003164444 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
ஏர்டெல்லின் புதிய சலுகை

உலக அளவில் தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம், ஆப்பிரிக்க ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஏர்டெல் வாடிக்கையாளர்கள், தென் ஆசிய நாடுகளான இந்தியா, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருக்கும் போது அவர்களுக்கு வரும் அழைப்புகளுக்கான ரோமிங் கட்டணத்தை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் தென் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் ஆப்ரிக்க ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரோமிங் கட்டணம் இல்லாமலே பேசலாம்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 17 நாடுகளுக்கு இந்த புதிய சலுகையை ஏர்டெல் வழங்கி இருக்கிறது. பிரிபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

சரக்கு வர்த்தக தொழிலுக்கான புதிய சாப்ட்வேரை ஜீவன் டெக்னாலாஜி வெளியிட்டது

சென்னையில் செயல்பட்டு வரும் ஜீவன் டெக்னாலஜி சாப்ட்வேர் நிறுவனம், சரக்கு வர்த்தகம் மற்றும் அதைச் சர்ந்த தொழிலுக்கான பிரத்யேகமான ‘ஃப்ரைசால் (FRISOL) என்ற புதிய சாப்ட்வேரை இன்று அறிமுகப்படுத்தியது.

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று தொடங்கிய ஆட்டோ செர்வ் 2012 கண்காட்சியில் இந்த புதிய சாப்ட்வேர் அறிமுக விழா நடைபெற்றது.

ஐந்து முக்கிய மென்பொருள் பிரிவுகளைக்கொண்ட ஃப்ரைசால் சரக்கு வர்த்தக தொழிலிலும் அதைச்சார்ந்த தொழிலிலும் காணப்படும் வேலைப்பாடுகள் அனைத்தையும் சிறப்பாக நிர்வகிக்க உதவும். ஒரு வாகனம் வைத்துத் தொழில் செய்யும் நிறுவனங்களிலும், மிகப்பெரிய அளவில் வாகனங்களை வைத்திருக்கும் நிறுவனங்களிலும் சீராக செயல்புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சாப்ட்வேர் மூலம், பார்சல் சேவை நிலையங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், விரைவு அஞ்சல் பணியாளர்கள் மற்றும் அதைச்சார்ந்த தொழில்கள் அனைத்திலும் தினந்தோறும் நடக்கும் ஏற்பாட்டியல் வேலைபாடுகளை சிறப்பாக முடித்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆற்றல்மிக்க கணக்காய்வு, வருவாய் கசிவு நிறுத்தம், சரியான நேரத்தில் முடிவு எடுத்தல், சரக்கு தடம் அறிதல், நிறுவன திட்டமிடல், நேரம் சேமிப்பு, தொழிலாளர் குறைப்பு உள்ளிட்ட சரக்கு தொழில் சார்ந்த அனைத்து வேலைகளையும் செய்யும் இந்த ஃப்ரைசால் சாப்ட்வேரை 1 மணி நேரத்திற்கு ரூ.10 க்கு கிடைக்குமாறு ஜீவன் நிறுவனம் திட்டம் வகுத்திருக்கிறது.

இதன் மூலம் சிறிய முறையில் சரக்கு தொழில் செய்பவர்களும் சாப்ட்வேரைப் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்பதுதான் இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.

இந்த புதிய சாப்ட்வேரைப் பற்றி ஜீவன் நிறுவனத்தின் மேலாளார் சுரேஷ் கூறுகையில், “காலத்திற்கேற்ப தொழிலில் மென்பொருள் முதலீடு செய்ய விரும்பும் ஏற்பாட்டியல் நிறுவனங்களுக்கு ஃப்ரைசால் நிச்சயம் ஒரு வெற்றித்திட்டமே! ஏற்பாட்டியல் தொழி சார்ந்த சிறு, நடுத்தர மற்றும் பெரு வணிக உரிமையாளர்கள் என அனைவருக்கும் இந்த புதிய சாப்ட்வேர் பெரும் பயன்கொடுக்கும்.

இம்மாதம் 17,18 ஆகிய தேதிகளில் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் கண்காட்சியில் காட்சியரங்கு எண்-21, இந்த புதிய ஃப்ரைசால் சாப்ட்வேர் பற்றிய விவரங்களையும், அதன் நன்மைகளையும் தெரிந்துகொள்ளலாம்.” என்றார்.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் வில்லை ரூ.2,959 ஆகவும், சவரன் ரூ.23,672க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.305 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66க்கும், ஒரு கிலோ ரூ.61,710க்கும் விற்கப்படுகிறது.

Visit Chennaivision for More Tamil Cinema News

ஆட்டோமொபைல் துறையில் கால்பதித்த எஸ்.வி.டி குரூப்

பல நிறுவனங்களை நடத்தி வரும் எஸ்.வி.டி குழுமம் தற்போது ஆட்டோமொபைல் துறையிலும் கால்பதித்துள்ளது. இந்நிறுவனம் சென்னை, புதிய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் யமாஹா விற்பனை வளாகம் ஒன்றை திறந்துள்ளது.

SVD Group யமாஹா என்ற பெயர் கொண்ட இந்த நிறுவனத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் திரைப்பட தயாரிப்பாளர் எடிட்டர் எம்.மோகன் மற்றும் அவருடைய மகன் இயக்குநர் எம்.ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு யமாஹா விற்பனை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்.

சர்வீஸ் செண்டரை யமாஹா நிறுவனத்தின் சோனல் மேனஜர் ராமும், உதிரி பாகங்கள் பிரிவினை யமாஹா நிறுவனத்தின் ரிஜினல் மேனஜர் மோகன் ராஜூம் திறந்து வைத்தார்கள்.

இந்த புதிய யமாஹா விற்பனை மையத்தைப் பற்றி பேசிய எஸ்.வி.டி குழுமத்தின் இயக்குநர் வால்ட்டர் ஃபிலிம் ஜெயச்சந்திரன், “பெருகி வரும் இரண்டு சக்கர வாகனத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு வடசென்னை மக்கள் சுலபமாக இரண்டு சக்கர வாகனங்களைக் குறிப்பாக இளைஞர்களின் ஃபேவரைட்டாகத் திகழும் யமாஹா பைக்குகளை வாங்கும் பொருட்டும் புதிய வண்ணாரப்பேட்டையில் வால்ட்டர்ஸ் யமாஹா என்கிற 9000 சதுர அடி விற்பனை வளாகத்தைத் திறந்திருக்கிறோம்.” என்றார்.

சிட்டி யூனியன் வங்கியின் 627வது ஏ.டி.எம் மையம் திறப்பு

சிட்டி யூனியன் வங்கியின் 627வது ஏ.டி.எம் மையம் சென்னை இன்று திறக்கப்பட்டது.

ஈசியான பேங்க், ராசியான பேங்க் என்ற அடைமொழியிக்கு ஏற்றவாறு இயங்கி வரும் சிட்டி யூனியன் வங்கியின் 627வது ஏ.டி.எம் மையம் சென்னை, நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தின் அருகே உள்ள ஃபோர் பிரேம்ஸ் பிரிவியூவ் திரையரங்க வளாகத்தில் இன்று திறக்கப்பட்டது.

நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த புதிய ஏ.டி.எம் மையத்தை திறந்து வைத்தார். சிட்டி யூனியன் வங்கியின் தலைமை பொதுமேலாளர் சேகர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கியின் கிளை மேலாளர் குமார், ‘ஃபோர் பிரேம்ஸ்’ கல்யாணம் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.

பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணை நிறுவனங்கள் முடிவு?

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 என்ற அளவுக்கு உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கான அதிகாரத்தை எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.

கடந்த மாதம் 24-ந்தேதி பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. பெட்ரோல் ரூ.7 உயர்த்தப்பட்டு பிறகு மீண்டும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஒரு பேரலுக்கு 10 டாலர் வரை உயர்ந்து விட்டது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 113 டாலராக உள்ளது. இதனால் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனையில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தினசரி ஏற்படும் பல கோடி ரூபாய் இழப்பை சரி கட்ட பெட்ரோல் விலையை உடனே உயர்த்த வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு எண்ணை நிறுவனங்கள் வலியுறுத்தின. லிட்டருக்கு ரூ. 1.50 உயர்த்தினாலே போதும் என்றும் எண்ணை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

ஆனால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க இருந்ததால் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் இழப்பு அதிகரித்துள்ளதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 வரை அதிகரிக்க வேண்டும் என்று தற்போது எண்ணை நிறுவனங்கள் கூறி வருகின்றன.

மத்திய அரசுக்கும் இதை ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அடுத்த மாதம் முதல் வாரம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

பல்க் எஸ்எம்எஸுக்கு தடை: மத்திய உள்துறை அமைச்சகம்

அடுத்த 15 நாட்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.சிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடை, நாடு முழுவதும் அவசரமாக அமல்படுத்தப்படுகிறது.

வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக பரவிய வதந்திக்கு இணையதள தொழில்நுட்பமே காரணம் என மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர் ஆர் பாட்டீல் கருத்து தெரிவித்திருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது . இந்த தடை, நாடு முழுவதும் அவசரமாக அமல்படுத்தப்படுகிறது.