உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் மெஸ்ஸி கோல் அடிக்கவில்லை

2018 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்தாட்ட தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள், பல்வேறு நாடிகளில் நடைபெற்று வருகிறது.

தென் அமெரிக்க கண்ட அணிகளுக்கான தகுதி சுற்றில் பிரேசில் – அர்ஜெண்டினா மோதிய போட்டி, இன்று அதிகாலை பிரேசிலின் பெலோ ஹாரிஸ்டண்ட் நகரில் நடைபெற்றது.

இரு அணிகளும் பலம் பொருந்திய அணிகள் என்பதால், மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. இப்போட்டியின், 25 வது நிமிடத்தில் பிரேசில் தனது முதல் கோலை பதிவு செய்தது. அந்த அணியின் கொடின்ஹோ கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் நெய்மர் 45 வது நிமிடத்தில் கோல் அடிக்க, பவுலின்ஹோ 59 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் பிரேசில் 3-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

பிரேசிலின் கோல்களுக்கு பதில் கோள் போட அர்ஜெண்டினா வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலன் கொடுக்கவில்லை. இருந்தாலும், நடசத்திர வீரர் மெஸ்ஸி, ஒரு கோலாவது போட்டு ஆறுதல் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்க, இறுதி வரை கோல் ஏதும் போடாமல் மெஸ்ஸி ஏமாற்றிவிட்டார்.

இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில், அர்ஜெண்டினாவை வீழ்த்தியது.

பிரேசில் 11 ஆட்டத்தில் 7 வெற்றி, ஒரு தோல்வி, 3 டிராவுடன் 24 புள்ளி பெற்று முதலிடத்தில் உள்ளது. அர்ஜென்டினா 6-வது இடத்தில் உள்ளது.

More