விஜய் மல்லையா வழக்கு, வங்கி அதிகாரிகள் கைது

பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா மீது நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், மல்லையா கடன் மோசடி வழக்கில், ஐடிபிஐ வங்கி, கிங்பிஷர் நிறுவன அதிகாரிகள் 8 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

இதில் ஐடிபிஐ வங்கியின் முன்னாள் சேர்மன் மற்றும் அதன் முன்னாள் அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிங்பிஷர் நிறுவனத்தின் அதிகாரிகள் 4 பேர் கைதாகியுள்ளனர்.

பெங்களூரில் உள்ள மல்லையாவின் இல்லம் உட்பட 11 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.