பெங்களூரில் கம்பாளா மீதான தடையை நீக்க போராட்டம் நடத்த முடிவு

உலகத்தையே வியக்க வைத்த தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தைப் போல, தற்போது பெங்களூர் மக்களும் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தி தங்களது பாரம்பரிய விளையாட்டான கம்பாளா மீதான தடையை நீக்க முடிவு செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய எருது விளையாட்டு கம்பாளா. இந்த எருது பந்தையமானது கரையோர கர்நாடாக மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள கிராமங்களில் அந்தந்த கிராம தலைவர்களின் வயல்களில் நடத்தப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இந்த கம்பாளா போட்டி நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் இறுதி வரை நடைப்பெறுவது வழக்கம்.

ஆனால் கடந்தாண்டு நவம்பர் 2016ல் இந்த தொடங்க இருந்த இந்த போட்டிக்கு கடந்த 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த பாரம்பரிய விளையாட்டிற்கும் பீட்டா அமைப்புதான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கியது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழர்கள் ஒன்று கூடி அறவழியில் போராடி பாரம்பரிய உரிமையை மீட்டு எடுத்தது போல், கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்திவரும் ’கம்பாளா’ போட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க, வரும் 28 ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.