ஈழத் தமிழர்களை ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்க்க முடிவு

ஆஸ்திரேலியா அதன் சர்ச்சைக்குரிய முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளை அமெரிக்காவில் இடம்பெயர்ப்பதற்கான உடன்பாட்டை எட்டியிருக்கிறது.

ஆஸ்திரேலியப் பிரதமர்  மால்கம் டர்ன்புல் இன்று அதனை உறுதிப்படுத்தினார்.

தற்போது முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு மட்டுமே அது பொருந்தும்.

தடுத்து வைக்கப்பட்டவர்களில், அகதிகள் என்று வகைப்படுத்த விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பவேண்டும்.

மூன்றாவதாக ஒரு நாட்டிற்கு இடம்பெயரவோ, சொந்த நாட்டுக்குத் திரும்பவோ மறுக்கும் அகதிகளுக்கு நவ்ரூ முகாமில் தங்குவதற்கான 20ஆண்டு விசா வழங்கப்படும்; ஆனால் நிதி ஆதரவு ஏதும் வழங்கப்படமாட்டாது என்று கூறப்பட்டது.

More