குடியரசு தினத்தன்று நடத்துவதாக கூறப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் ரத்து: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

குடியரசு தினத்தன்று நடத்துவதாக கூறப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் ரத்து: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

குடியரசுத் தினத்தின் மீது தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும், என்று அறிவித்த பா.ம.க தற்போது, தாங்கள் நடத்துவதாக அறிவித்த போட்டிகளை ரத்து செய்துள்ளது.

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் எந்த தடையுமின்றி அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படுவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும்; அவ்வாறு பிறப்பிக்கப்படவில்லை என்றால் குடியரசு தினத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தேன்.

இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. அத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்திக் காட்டப்பட்டிருக்கின்றன. எனவே, தமிழகம் முழுவதும் குடியரசு தினத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் கைவிடப்படுகின்றன.

எனினும் பின்னாளில் ஜல்லிக்கட்டுக்கு ஆபத்து நேர்ந்தால், பா.ம.க. இன்னும் கடுமையாக போராடும்.

Related Post

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை மீனம்பாகத்தில் அமைந்துள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மிகவும் போக்குவரத்து நெரிசலான ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இந்த…