விஷாலுடன் நடிக்க மறுத்த அக்ஷரா ஹாசன்!

மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் அக்ஷரா ஹாசனுக்கு பதிலாக ஆண்ட்ரியா சேர்க்கப்பட்டுள்ளார்.

த்ரில்லர் படமாக உருவாகி வரும் துப்பறிவாளன் படத்தை இயக்குநர் மிஷ்கின் நடிகர் விஷாவை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஹீரோயினாக அக்ஷரா ஹாசன் நடிப்பதாக இருந்தது. பின்னர் படக்குழுவினருடன் அக்ஷராவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கேரக்டரில் தற்போது ஆண்ட்ரியா நடிக்கிறார். ஆண்ட்ரியாவை வைத்து படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படத்தில் பிரசன்னா மற்றும் வினய் ராய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொங்கல் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தில் நடித்திருந்தால் அக்ஷராவின் முதல் கோலிவுட் படமாக இருந்திருக்கும். படத்திற்கு அரோல் குரோலி இசை அமைக்கிறார்.