ஆண்களை தரக்குறைவாக பேசிய நடிகை ஊர்வசி?

அனைத்து மொழிகளிலும் டி.ஆர்.பி ரேட்டிங்கை கூட்டுவதற்காக குடும்ப பிரச்சினை தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது.

இது போன்ற நிகழ்ச்சிகளை பிரபல நடிகைகள் தொகுத்து வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், மலையாள சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும்  நிகழ்ச்சி ஒன்றை நடிகை ஊர்வசி தொகுத்து வழங்குகிறார்.

இதற்கிடையில், நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆண்களை நடிகை ஊர்வசி தவறான வார்த்தைகளினால் திட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

சமீபத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவர், ஊர்வசி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் தான் பங்கேற்ற போது அவர், தன்னை மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியதாக, மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து நடிகை ஊர்வசி மற்றும் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

More