நடிகை பூஜா உமாசங்கர் தொழில் அதிபருடன் ரகசிய திருமணம்

நடிகை பூஜா உமாசங்கர் தொழில் அதிபருடன் ரகசிய திருமணம்

தொழில் அதிபருடன் பூஜா ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நான் கடவுள், ஜே ஜே, தம்பி உள்பட பல படங்களில்  நடித்திருப்பவர் பூஜா. இவரது தாய் இலங்கையை சேர்ந்தவர். தந்தை கர்நாடகாவை சேர்ந்தவர். பெங்களூரில் படித்த பூஜா தமிழ், மலையாளம், தெலுங்கு, சிங்கள மொழிப் படங்களிலும் நடித்து வந்தார். தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அவ்வப்போது சிங்கள படத்தில் நடிப்பதால் பெரும்பாலும் இலங்கையிலேயே தங்கி இருக்கிறார்.

பூஜாவுக்கும் இலங்கையை சேர்ந்த தொழில் அதிபரும், மாடலிங் நடிகருமான தீபக் சண்முகநாதனுக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர் தீபக், பூஜா இருவரும் நட்போடு பழகிவந்தனர். இந்நிலையில் இருவருக்கும் திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டது. எனது குணத்துக்கு தீபக்கின் குணம் ஒத்துப்போகாது என்று கூறி அவரை விட்டு பூஜா பிரிந்து விட்டார். இதனால் திருமணம் தடைபட்டது. கடந்த 2 வருட இடைவெளியில் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாக 2 முறை தகவல்கள் பரவின.

ஆனால் அவை உண்மையில்லை என்று பூஜா மறுத்திருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் கொழும்பில் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக இணைய தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதுபற்றி அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்க முயன்றபோது அவரது போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இணைய தள டுவிட்டர் பக்கத்திலும் அவரை தொடர்பு கொண்டதற்கு பதில் எதுவும் அளிக்கவில்லை.

Related Post

ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த சிறுமி A.P. நேத்திராவை இளைய தளபதி விஜய் அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டினார்

ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த சிறுமி A.P. நேத்திராவை இளைய தளபதி விஜய் அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டினார்

தழிழ்நாடு ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோசியேஷன் கீழ் இயங்கும் சேலம் மாவட்டம் ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோஷியஷனில் உள்ள Josh Queen Club…