நடிகை குஷ்பு முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையை விசாரிக்க இன்று அப்பல்லோ வருகை!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து விசாரிக்க இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.

கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் அப்பல்லோவுக்கு சென்று மருத்துவர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையில், இன்று காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.