நடிகர் சர்வானந்த் நடிகை அனுபமா பரமேஸ்வரனுடன் காதலா?

நடிகர் சர்வானந்த் நடிகை அனுபமா பரமேஸ்வரனுடன் காதலா?

கொடி படத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகியுள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரனும் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த நடிகர் சர்வானந்தும் காதலித்துவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரேமம் மலையாளப் படம் மூலமாக அதிக கவனம் பெற்ற அனுபமா, கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். சர்வானந்துடன் இணைந்து அனுபமா நடித்த சதாமனம் பவதி என்கிற தெலுங்குப் படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையே காதல் உருவானதாகக் கூறப்படுகிறது. சமூகவலைத்தளத்தில் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்வதும் புகைப்படங்கள் பகிர்வதும் காதலை உறுதிப்படுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த விவகாரம் குறித்து இருவரும் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Related Post

நடிகர் வினுசக்ரவர்த்தி மரணம்!

நடிகர் வினுசக்ரவர்த்தி மரணம்!

பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி (74) சென்னையில் போலிஸ் சப் -இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா…