நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் காதல் முறிவு?

நடிகர் விஷாலும் நடிகை வரலட்சுமியும் பல ஆண்டுகளாகக் காதலித்துவருகிறார்கள். இதை இருவரும் நேரடியாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இது தொடர்பான செய்திகளுக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததில்லை.

சமீபத்தில், வார இதழ் ஒன்றுக்கு விஷால் அளித்த பேட்டியில், வரலட்சுமியுடன் காதல். கூடிய சீக்கிரமே கல்யாணம்னு சொல்றாங்க. அது எப்போது? என்கிற கேள்விக்கு அவர் அளித்த பதில்: ‘வரலட்சுமியும் நானும் சிறிய வயதிலிருந்தே நண்பர்கள். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் திருமணம்தான். ஆமாம், 2018-ம் ஆண்டு ஜனவரி 14, என் திருமணம். இப்போதே கார்த்தியிடம் சொல்லி பதிவு செய்துவிட்டேன்.’ என்று கூறியிருந்தார். இதனையடுத்து விஷால் – வரலட்சுமி திருமணம் குறித்த உறுதியான தகவலாக அது எண்ணப்பட்டது.

இந்நிலையில் காதல் முறிவு குறித்து நடிகை வரலட்சுமி ட்விட்டரில் ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: காதலர்கள் பிரிவது இதைவிட மோசமாக இருக்காது. ஒரு நபர் 7 ஆண்டுக் கால காதலை தன்னுடைய மேலாளரின் வழியாக முறித்துக்கொண்டுள்ளார். உண்மையான காதல் எங்கே போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனை முன்வைத்து விஷால் – வரலட்சுமி காதல் முறிவு என்று சமூக வலைத்தளத்தில் பலரும் பேசிவருகிறார்கள்.