பிரபல நடிகர் ராமராஜன் மருத்துவமனையில் அனுமதி உடல் நிலை பற்றி வதந்தி

தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருந்து வீழ்ச்சியடைந்த ஒரு நடிகர் ராமராஜன். இவர் அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். தனது காதல் மனைவியான நளினியை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு வாழ்ந்து வந்தார்.

நடிகர் ராமகராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இதனால் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரித்ததில், இது வதந்தி என்று தெரிய வந்துள்ளது. இது குறித்து நடிகர் ராமராஜனிடம் தொடர்பு கொண்டு பேசிய போது,  தான் நலமாக இருப்பதாக தெரிவித்த அவர், தேர்தல் பிரசாரம் செய்வதற்காக திருப்பரங்குன்றத்தில் இருப்பதாக, தெரிவித்தார்.