சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு பற்றி கமல் என்ன சொல்கிறார்?

ஜல்லிக்கட்டு முதல் சசிகலா – ஓபிஎஸ் சண்டை வரை என, தற்போது தமிழகத்தில் எது நடந்தாலும் கருத்து தெரிவிக்கும் முதல் திரையுலக பிரபலம் நடிகர் கமல்ஹாசன் தான்.

அவர் சொல்வது சில நேரங்களில் புரியவில்லை என்றாலும், அவர் என்ன சொல்ல வருகிறார், என்பதை அறிய மக்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

அதன்படி, சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கமல், ”பழைய பாட்டுத்தான் இருந்தாலும், தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்…, எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்” என்று தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு பற்றி கமல் என்ன சொல்கிறார்?